அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் சம்பளம்… புதிய முறை குறித்து வெளியாகியுள்ள தகவல்!!

654

அரச ஊழியர்களுக்கு..

அரச ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய முறை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில யோசனையொன்றை வழங்கியுள்ளார். இன்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், வாரந்தோறும் சம்பளம் வழங்குவதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரேயடியாக பாரிய தொகையை கண்டுபிடிக்கும் சவாலுக்கு அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியதில்லை.

சம்பளம் வழங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடனில் சிக்காமல் இருப்பார்கள். வாரச் சம்பளம் வாங்கும் போது அந்த வார செலவுகள் தான் இருக்கும்.

இந்த முறையை பின்பற்றுவதால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கான பெரிய தொகையைக் கண்டுபிடிக்க அரசாங்கமோ, தனியாரோ சிக்கத் தேவையும் இல்லை. சம்பளம் வழங்குபவரும், சம்பளம் வாங்குபவரும் கடன் வலையில் சிக்கிக் கொள்ளும் அபாயத்தில் இருந்து விடுபடுவார்கள்.

வாரம் வாரம் சம்பளம் கொடுப்பது ஒரு நிம்மதி. மேலும், உலகின் பல நாடுகளில், வாரந்தோறும் அல்லது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை சம்பளம் செலுத்தப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார். அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவது தொடர்பில் அண்மைக்காலமாக பல சர்ச்சைக் கருத்துக்கள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.