இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுக : மத்திய அரசுடன் நட்புறவு ஏற்பட விரும்புகிறேன் : ஜெயலலிதா!!

591

Jeya

தேசிய அளவில் 3வது பெரிய கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. கூட்டணி இன்றி வெற்றி பெற்றுள்ளோம் எங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுவோம் என தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.
மகத்தான வெற்றியை வழங்கிய தமிழக மக்களுக்கு நன்றி என கூறிய அவர், தம் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்வேன் என்றும் உறுதியளித்தார்.

தேர்தல் அறிக்கையில் அறிவித்தவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதிமுக வெற்ற பெற உழைத்த தொண்டர்களுக்கு ஜெயலலிதா இதன்போது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் புதிதாக அமையவுள்ள அரசுக்கும், பிரதமர் பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கும் எனது வாழ்த்துகள். வரும் காலத்தில் மத்திய அரசுடன் நட்புறவு ஏற்படும் என்று விரும்புகிறேன் எனவும் அவர் கூறியதாக தமிழக ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.