லாட்டரியில் கிடைத்த பல கோடி பணத்தால் நிம்மதி போச்சு என புலம்பிய நபர் : இறுதியில் நடந்த திருப்பம்!!

1690

கேரளாவில்..

கேரளாவில் லொட்டரியில் ரூ 25 கோடி பரிசை வென்ற ஆட்டோ ஓட்டுனர் லொட்டரி விற்பனை நிலையம் தொடங்கி ஆச்சரியம் கொடுத்துள்ளார். அனூப் என்ற நபருக்கு கடந்தாண்டு செப்டம்பரி பம்பர் லொட்டரி குலுக்கலில் ரூ 25 கோடி பரிசு விழுந்தது.

வெளிநாட்டுக்குச் செல்வதற்காக கேரளா கூட்டுறவு வங்கியில் 5 லட்சம் ரூபாய் கடன் கேட்டிருந்ததாகவும், லொட்டரி பரிசு கிடைத்ததால் லோன் வேண்டாம் என வங்கியில் கூறிவிட்டதாகவும் அனூப் அப்போது தெரிவித்திருந்தார்.

பெரிய பரிசு விழுந்ததால் தன்னிடம் கடன் கேட்டு தினமும் வீட்டிற்கு பலர் வருவதால் நிம்மதி போய்விட்டது எனவும் புலம்பியபடி பேட்டி கொடுத்தார். இந்த நிலையில் அனூப் திருவனந்தபுரத்தில் கடந்த 20-ம் திகதி லொட்டரி விற்பனை நிலையத்தை தொடங்கினார்.

லொட்டரியால் என் அதிர்ஷ்டம் மாறியது, அதனால், லொட்டரி வியாபாரம் செய்ய முடிவு செய்தேன் என கூறுகிறார் அனூப். தனது மனைவி மாயா-வின் முதல் எழுத்தான ‘எம்’ மற்றும் தனது பெயரின் முதல் எழுத்தான ‘ஏ’ஆகியவற்றை சேர்த்து எம்.ஏ லக்கி செண்டர் என லொட்டரி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளார்.

அனூப் மனைவி மாயா கூறுகையில், இப்போது உதவி கேட்டு வருபவர்களின் எண்ணிக்கை முன்பைவிட குறைந்துள்ளது, கடன் கேட்டு சிலர் தற்போது வந்தாலும் எங்களுக்கு பழகிவிட்டதால் அவர்களை கண்டுகொள்வதில்லை.

லொட்டரியில் கிடைத்த பணத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கி புதுப்பித்து அதில் வசித்து வருகிறோம். வேறு தொழில் குறித்து இன்னும் ஆலோசிக்கவில்லை என கூறியுள்ளார்.