வதந்திகளை பரப்ப வேண்டாம்.. இந்த செய்தியை உடனே நிறுத்துங்கள் என கதறும் பிரபல பாடகி!!

322


மங்க்லி..ப்ளீஸ்.. என்னை யாரும் அடிக்கலை.. என் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படலை. இந்த செய்தியை உடனே நிறுத்துங்க என்று கதறிக் கொண்டிருக்கிறார் ‘ஓ.. சொல்றீயா.. பாடலைப் பாடிய பின்னணி பாடகி மங்க்லி. தெலுங்கு சினிமாவின் பிரபல பின்னணி பாடகியாக வலம் வருபவர் மங்க்லி.இவர் தனது வசீகர குரலால் பாடிய பெரும்பாலான பாடல் ஹிட் அடித்துள்ளன. இவரது பாடலுக்கு தனி ரசிர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக ‘புஷ்பா’ படத்தில் இடம்பெற்ற, ‘ஊ சொல்றியா மாமா’ பாடலின் தெலுங்குப் பதிப்பைப் பாடியிருந்தார்.
இப்பாடல் தெலுங்கில் மட்டுமல்லாமல் மொழி புரியலைன்னாலும் இந்தியா முழுவதுமே ஒரு பெரிய ரவுண்ட் அடித்து ரசிகர்களைக் கவர்ந்திழுத்தது. இந்நிலையில், பாடகி மங்க்லி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடந்த ‘பெல்லாரி உற்சவம்’ இசை நிகழ்ச்சியில் கடந்த சனிக்கிழமை கலந்து கொண்டார்.


நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது, அவர் மேக்கப் அறைக்குள் ரசிகர்கள் நுழைந்ததாகவும் அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் பாடகி மங்க்லி கார் கல்வீசித் தாக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின.

இதனால் பரபரப்பு நிலவியது. ஆனால், இந்த செய்திக்கு பாடகி மங்க்லி மறுப்பு தெரிவித்துள்ளார். தாக்குதல் எதுவும் நடக்கவில்லை எனவும் அந்த செய்தியில் உண்மை இல்லை என தெரிவித்து உள்ளார்.


அவரது ட்விட்டர் பதிவில், பல்லாரி நிகழ்வு வெற்றியடைந்தது. நான் செய்த சிறந்த நிகழ்வுகளில் இதுவும் ஒன்று. மக்கள் என் மீது அபரிமிதமான அன்பு காட்டுகிறார்கள். நிகழ்ச்சியில் நான் நன்றாக நடத்தப்பட்டேன். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இவ்வாறு செய்கிறேன், என ட்வீட் செய்து உள்ளார்.

மேலும், கர்நாடக ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழிந்தார்கள். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நன்றாகக் கவனித்துக் கொண்டார்கள். என் பெயரையும் புகழையும் கெடுக்க, என் கார் மீது கல்வீசி தாக்கினார்கள் என்பது உட்பட பல பொய் தகவல்கள் பரப்பப்படுகின்றன. தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.