தேநீர் கடையில் மதுபானம் விற்பனை செய்தவர் யாழில் கைது!!

870

Arestயாழ். நவக்கிரி, நிலாவரை கிணற்றுப் பகுதியிலுள்ள தேநீர்க் கடை ஒன்றில் மதுபானம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் ஒருவரை நேற்று கைதுசெய்ததாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், அக்கடையிலிருந்து 6 மதுபானப் போத்தல்களைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.

இந்தச் சந்தேகநபர் தனது தேநீர்க் கடையில் வைத்து மதுபானம் விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர் போன்று சென்ற பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் தற்போது பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.