வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் முதலாவது இடத்தினை பெற்ற மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி

4103


வவுனியா மாவட்டத்தில் புலமைப்பரீட்சையில் முதலாவது இடத்தினை பெற்ற மாணவி நிர்சிகா சத்தியகீர்த்திபுலமைப்பரீட்சை பெறுபேறுகள் நேற்று (25.01.2023) இரவு வெளியாகியிருந்த நிலையில் வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவி நிர்சிகா சத்தியகீர்த்தி 190 புள்ளிகளை பெற்று மாவட்ட ரீதியில் முதலாவது இடத்தினை பெற்றுள்ளார்.

பாடசாலையில் தரம் 5D வகுப்பில் கல்வி பயின்ற இவ் மாணவி பல துறைகளில் சாதனைகளை நிலைநாட்டி வந்த நிலையில் புலமைப்பரீட்சையிலும் சிறந்த பெறுபேற்றை பெற்று பாடசாலைக்கும் பெற்றோருக்கும் பெருமையினை தேடித்தந்துள்ளார்.

மேலும் இறம்பைக்குளம் மகளிர் மகா வித்தியாலயத்தில் 94 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெறுபேற்றினை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


மிகுந்த அர்ப்பணிப்புடன் செயலாற்றி வழிப்படுத்திய ஆசிரியர் , அதிபர் ஒத்துழைப்பு வழங்கிய பெற்றோர்கள் , வழிகாட்டல்களை வழங்கிய கல்வியதிகாரிகள் அனைவருக்கும் நன்றிகலந்த வாழ்த்துகளை பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இம்மாணவர்களுக்கு வவுனியா நெற் நிர்வாகமும் தனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றது.