வவுனியாவில் நியாமற்ற வரிச் சட்டத்திற்கெதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

637

வவுனியாவில் நியாமற்ற வரிச் சட்டத்திற்கெதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்

நியாமற்ற வரிச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று (26.01.2023) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஷ் புட்சிட்டிக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வங்கி ஊழியர்கள் நண்பர்களுக்கு வரிச்சலுகை தொழில் வல்லுநர்களுக்கு வரிச்சுமை , வானுயரும் பணவீக்கம் தொழில் வல்லுநர்கள் நடு வீதிக்கு போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திவாறும் தொழில் வல்லுநர்களை சுரண்டித் திண்ணும் வரி யோசனையை மீளப்பெறு , அரசியல்வாதி களவெடுத்த காசை எடுத்து நாட்டை திருத்து , வங்கி திருடன்கள் பெரும் பதவிகளில் , நியாயமான வரி வேண்டும் மக்களுக்கு சலுகை வேண்டும் , எல்லா புறமும் ஊழல் மோசடி இன்னும் அவர்கள் மாடங்களில் போன்ற பல கோசகங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

குறித்த போராட்டம் 30 நிமிடங்களில் நிறைவுற்றிருந்தமையுடன் வவுனியாவிலுள்ள பெருன்பான்மையான வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்