வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தந்தையை இழந்த ,பிரிந்த பிள்ளைகளின் குடும்பங்களுக்கு உதவிய புலம் பெயர் வாழ் ரஞ்சித்குமார்!!(படங்கள்)

375

கனகராயன்குளம் பெரிய குளத்தில் வசிக்கும் குடும்பங்களில் மிகவும் வறிய 7 குடும்பங்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளா தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக ஒரு மாதத்துக்கு தேவையான அரிசி, மா, கிழங்கு, பருப்பு, மீன்டின், சீனி, அங்கர் என உலர் உணவு பொதிகளை ரஞ்சித்குமார் தனது மருமகனான கிரோனின் நினைவாக வழங்கி வைத்தார் .

சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் கணவர் இறந்த நிலையில் தனது மகளுடனும், பேத்திகளுடனும் வாழும் நிர்மலாதேவி தனது மகளின் கணவனும் புனர்வாழ்வு முகாமில் இருப்பதால் உதவிகள் அற்ற நிலையில் ராணுவத்தால் நிர்மாணித்து கொடுக்க பட்ட வீட்டில் வாழ்கிறார். அவருக்கும்,அவரது குடும்பத்துக்கும் உலர் உணவு பொதி வழங்கி வைக்கப்பட்டது.

கணவர் கைவிட்டு சென்று இரு பிள்ளைகளுடன் மிக வறுமையில் வாடிய திலகேஸ்வரிக்கு உலர் உணவு பொதியுடன் ஒரு வயதுடைய அவரது குழந்தை படுக்க பாய் கூட இல்லை என்றும், தனது அடுத்த மகன் கொப்பி வாங்க காசு இல்லாமல் பாடசாலை செல்ல வில்லை என்று அழுத படியே தனது கஷ்டத்தை சொல்ல சிறு தொகை பணமும் ரஞ்சித்குமாரால் வழங்கி வைக்க பட்டது

கணவர் கைவிட்டு இரு பிள்ளைகளுடன் வறுமையில் வாடிய ஆனந்த குமாரிக்கு உலர் உணவு பொதி வழங்க பட்டது . தாய் வருத்தத்தில் இறந்து விட்ட தந்தையும் கைவிட்டு சென்று விட அம்மம்மா ராசலட்சுமியின் அரவணைப்பில் வாழும் 4 பிள்ளைகளுக்கும் உலர் உணவு வழங்க பட்டதுடன் அந்த பிள்ளைகள் வறுமையில் பாடசாலையில் முதலாம் பிள்ளைகளாக வருவதாக கூறியதுடன் படிப்புக்கும் உதவேண்டும் என்று ராசலெட்சுமி அம்மா கேட்டு கொண்டார்.

கணவர் இறந்த நிலையில் மகன் ஒருவரும் விபத்தில் இறந்த நிலையில் உழைத்து தரும் ஒரு மகனும் இறுதி யுத்தத்தில் செல் துண்டு உடலில் ஏறியநிலையில் வருத்ததுடன் மருத்துவ வசதிக்குகூட பணம் இல்லாமல் வறுமையில் வாடிய சிவனங்கைக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்க பட்டதுடன் மகனின் மருத்துவ செலவுக்கும் உதவுவதாக ரஞ்சித்குமார் உறுதியளித்தார்.

கணவரை இழந்த நிலையில் 2 பிள்ளைகளுடன் அடிப்படை வசதிகள் கூட இல்லாத வீட்டில் வசிக்கும் புஸ்பராணிக்கு உலர் உணவு பொதி வழங்கி வைக்க பட்டது.

கணவன் இறுதி யுத்தத்தில் செல் பட்டு இறந்து விட 3 பெண் பிள்ளைகள் இருந்தாலும் உதவிய அண்ணனும் திடீரென இறந்து விட இரு பிள்ளைகளுடன் வறுமையில் வாடிய ருக்மணிக்கும் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டதுடன் தன் நிலையை கலங்கிய விழிகளுடன் சொல்ல அவருக்கும் சிறு தொகை பணமும் வழங்கி வைக்க பட்டது .

தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்க பட்டன. இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன் ) மாணிக்கம் ஜெகன், புலம் பெயர் வாழ் ரஞ்சித்குமார், ஸ்டெபான், மற்றும் ரியோன், சமுர்த்தி உத்தியோகத்தர் சர்மிளா ஆகியோர் கலந்து கொண்டனர்.

11 12 13 14 15 16 17 18 19 20 21