இலங்கையில் தங்கத்தின் விலையில் திடீரென ஏற்பட்டுள்ள மாற்றம்!!

582


தங்கத்தின் விலை..தங்கத்தின் விலை உலக சந்தையில் நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது. அதன்படி, நேற்றைய தினம் (27.01.2023) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 699,710 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த இரண்டு மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது இன்றையதினம் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
மேலும், கடந்த ஒரு மாதத்தில் தங்கத்தின் விலையில் பதிவான முதல் வீழ்ச்சி இதுவாகும். இவ்வாறான நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 197,500 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,100 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 172,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.