4 வருடங்களாக வீட்டுக்குள்ளேயே இருந்த பெண்… கதவை உடைத்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!

444


லாரா..



இளம் பெண் ஒருவரின் தந்தை இறந்து விட்டது பற்றி அவரிடம் தெரிவிக்க சென்ற சமயத்தில் உறவினர்களுக்கு திகிலூட்ட வைக்கும் விஷயம் ஒன்று காத்திருந்துள்ளது. சர்ரே என்னும் பகுதியில் ஏழைகளுக்காக அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றில் தனியாக வாழ்ந்து வந்துள்ளார் லாரா வின்ஹம் என்ற பெண்.



லாராவுக்கு சிறு வயது முதலே நோய் வாய்ப்பட்டு இருந்ததால் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் யாரிடமும் இருக்காமல் தனியாகவும் வசித்து வந்துள்ளார்.




அதுமட்டுமில்லாமல், அவருக்குள்ள நோயின் காரணமாக குடும்பத்துடன் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஏதாவது செய்து விடுவார்கள் என்றும் அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்ததால் அரசு ஒதுக்கியுள்ள வீடு ஒன்றிலும் லாரா தனியாக தங்கி வந்ததாக தகவல்கள் கூறுகின்றது.


இதனிடையே கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக லாராவின் தந்தை இறந்து போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி, லாராவிடம் தெரிவிப்பதற்காக அவர் தங்கி இருந்த வீட்டிற்கு சுமார் 4 வருடங்கள் கழித்து உறவினர்கள் சென்றுள்ளனர்.

அங்கே கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த நிலையில், கடிதம் போடும் இடைவெளி வழியாக உறவினர் எட்டிப் பார்க்க, அங்கே கால் ஒன்று தெரிவதை அறிந்து உடனடியாக போலீசாருக்கும் அவர்கள் தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது.

லாரா உயிரிழந்தபடி, உடல் காய்ந்து சுருங்கி போயிருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது. முன்னதாக தன்னுடைய காலண்டரில், 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் “உதவி தேவை” என்றும் லாரா எழுதி வைத்துள்ளார்.

இதன் பின்னர் சுமார் 4 ஆண்டுகளாக அவரது வீட்டிற்கு வந்த கடிதங்கள், பில்கள் உள்ளிட்ட எந்த ஒரு விஷயமும் தொடப்படாமல் கிடந்துள்ளது. தொடர்ந்து லாராவின் உடல் பாகங்களை கொண்டு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர் 3 1/2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்துள்ளது.

அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட வீட்டில் பெண் ஒருவர் தனியாக இருந்த நிலையில், சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அவர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பலரையும் ஒரு நிமிடம் பீதியில் ஆழ்த்தி இருந்தது. இது தொடர்பாக லாராவின் உறவினர்கள் புகார் ஒன்றையும் அளித்துள்ளனர்.

தனியாக வாழ்ந்து வந்த பெண்ணை இத்தனை நாட்கள் எட்டி கூட பார்க்காமல் இருந்தது பற்றியும், சமூக சேவகர்கள் பராமரிப்பு குறித்தும் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக இந்த வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும் என்றும் லாராவின் உறவினர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.