திமுகவின் படுதோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடும் அழகிரி ஆதரவாளர்கள்!!

540

Alagiri

நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் எங்களுக்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்று மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் தமிழகத்தில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இது குறித்து மு.க. அழகிரி கூறுகையில், நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை. அதனால் எங்களுக்கு வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை. எங்களிடம் எதுவும் கேட்காதீர்கள் என்றார்.

அப்போது அங்கு கூடியிருந்த அழகிரியின் ஆதரவாளர்களோ, அண்ணன் திமுக தோல்வி அடைந்ததில் மகிழ்ச்சியாக இருந்தாலும் தான் ஆதரித்த மதிமுக உள்ள கட்சிகளை பின்னடைவை சந்தித்துள்ளதை நினைத்து வருந்துகிறார். திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட வேண்டும் என்றேன் என்ன வேலை செய்துள்ளீர்கள் என்று கோபமாக கேட்டார் என்றனர்.

அழகிரியை புறக்கணித்ததால் தான் திமுக தோல்வி அடைந்துள்ளது என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். அவர்கள் திமுகவின் தோல்வியை இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.