மோடி வெற்றி பெற்றுள்ளதால் கடந்த ஆண்டு சொன்னதை போலவே நடிகர் கமால் ஆர்.கான் இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளார். மோடி பிரதமரானால் நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று கடந்த ஆண்டு நடிகர் கமால் ஆர்.கான் சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று, மத்தியில் மோடி தலைமையில் பாஜக ஆட்சியமைக்கவுள்ளது. இன் நிலையில் தான் கூறியதை நிறைவேற்றும் வகையில் நாட்டை விட்டு வெளியேறுவதாக ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் கமால்ஆர்.கான்.
இதுபற்றி தனது ட்விட்டரில் கூறியுள்ள அவர், மோடி வெற்றி பெற்றுவிட்டார், அதனால் நான் சொன்னது போலவே இந்தியாவை விட்டுச் செல்கிறேன் என்றும் மேலும் நான் முன்னால் பாகிஸ்தான் கிரிக்கட் வீரர் ஷோயப் அக்தருடன் செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.




