வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியின் புதிய கற்கை நெறிகளுக்கான நேர்முகத்தேர்வு சம்பந்தமான அறிவித்தல்!!

967

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரி..

வவுனியா தொழில்நுட்பக் கல்லூரியில் 2023 ம் ஆண்டுக்கான டிப்ளோமா (NVQ 5), சான்றிதழ் NVQ 4, NVQ 3 உட்பட பல்வேறு கற்கை நெறிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான நேர்முகத்தேர்வுகள் நாளை (02.02.2023) வியாழக்கிழமை தொழில்நுட்பக் கல்லூரியில் இடம்பெறவுள்ளதுடன்.

கற்கைநெறிகளுக்கு இணையம் மூலமாகவோ நேரடியாகவோ விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் நாளை இடம்பெறவுள்ள நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முடியும் எனவும்,

விண்ணப்பித்த மாணவர்களுக்கு நேர்முகத்தேர்விற்கான அழைப்பு, கைத்தொலைபேசியில் குறுந்தகவல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு கிடைக்காத மாணவர்களும் நாளைய நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முடியும் என்றும்,

இதுவரை கற்கைநெறிகளுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள் நாளை (02.02.2023) தொழில்நுட்பக் கல்லூரிக்கு நேரடியாக வருகைதந்து நேர்முகத்தேர்வில் கலந்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்த கல்லூரியின் அதிபர் ஆ.நற்குணேஸ்வரன்,

இவ் ஆண்டு கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் பரீட்சை முடிவடைந்ததும் நேரடியாக வருகைதந்து தாங்கள் விரும்பும் கற்கைநெறிக்கான அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலதிக தொடர்புகளுக்கு
அதிபர்,
தொழில்நுட்பக் கல்லூரி,
மன்னார் வீதி,
நெளுக்குளம்,
வவுனியா
தொலைபேசி இலக்கம் 024 222 3664, 024 222 6720.