மொத்த குடும்பமும் தற்கொலை செய்துகொண்ட சோகம் : சிக்கிய கடிதத்தால் வந்த திருப்பம்!!

292

இந்தியாவில்..

இந்தியாவில் முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்கள் 3 பேருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் மிஸ்ரா (45). இவர் மனைவி நீலம்.

தம்பதிக்கு அன்மோல் (13), சர்தக் (7) என இரு மகன்கள் இருந்தனர். சஞ்சீவ் முன்னாள் கவுன்சிலர் ஆவார். இந்த நிலையில் சஞ்சீவ் தனது குடும்பத்தாருடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பில் பொலிசார் விசாரித்த நிலையில் அவர் எழுதியிருந்த கடிதத்தை கைப்பற்றினர்.

அதில், தனது மகன் muscular dystrophy என்ற மரபணு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக 5 ஆண்டுகளாக மொத்த குடும்பமும் பாதிப்பில் இருந்ததாகவும் எழுதப்பட்டிருந்தது.

மேலும் நோயின் சிக்கலைத் தாங்க முடியாமல் குடும்பத்தினர் வாழ்க்கையை முடித்துக்கொண்டதாக அந்த குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு தற்கொலைக்கு முன்னர் சஞ்சீவ் சமூகவலைதள பதிவில், எதிரிகளின் குழந்தைகளைக் கூட இந்த நோயிலிருந்து கடவுள் காப்பாற்றட்டும்.

என்னால் என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை, இனி வாழ விரும்பவில்லை என பதிவிட்டிருக்கிறார். குடும்பமே உயிரை மாய்த்து கொண்டது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.