வவுனியாவில் இலங்கையின் 75வது சுதந்திரதினம் அனுஷ்டிப்பு!!

822

75வது சுதந்திரதினம்..

வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04.02.2023) காலை 8.30 மணியளவில் இலங்கையின் 75ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பி.ஏ.சரத்சந்திர தலைமையில் இடம்பெற்றது.

தேசிய கொடியை பிரதம விருந்தினர் ஏற்றி வைத்தமையினையடுத்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தேசிய கீதம் மாணவர்களால் பாடப்பட்டது.

மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்புடன் சர்வமதத் தலைவர்களின் உரை, தலைமையுரை, பிரதம விருந்தினர் உரை என்பவற்றுடன் மூன்று இனங்களையும் பிரதிப்படுத்தும் வகையிலான நடனமும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.காதர் மஸ்தான் கலந்துகொண்டதுடன் சர்வமதத் தலைவர்கள், வன்னி பிராந்திய படைகளின் பிரதானி விமானப்படை, சிவில் பாதுகாப்புப்படைகளின் பிரதானிகள்,

வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ரி.திரேஸ்குமார், பிரதேச செயலாளர்கள்,

மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.