கிளிநொச்சியில் சத்யசாயி சர்வதேச நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்யசாய் சேவா நிலையம்!!

775

சத்யசாய் சேவா நிலையம்

இலங்கை சத்யசாயி சர்வதேச நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்யசாய் சேவா நிலையம் நாளை ஞாயிற்றுக்கிழமை (05.02.2023) வைபவ ரீதியாக கிளிநொச்சி ஜெயந்திநகரில் திறந்து வைக்கப்படவிருக்கின்றது.



“எல்லோருடனும் அன்பாக இரு எல்லோருக்கும் சேவைசெய்” என்று பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபா அவர்களின் கோட்பாட்டினை பின்பற்றி உலகம் முழுவதும் பல பக்தர்கள் சத்ய சாயி பாபாவின் போதனைகளை பின்பற்றி பல்வேறு சேவைபணிகளை ஆற்றிவருகின்றார்கள்.

குறிப்பாக இலங்கையில் சத்யசாயி சர்வதேச நிறுவனம் ஐந்து பிராந்தியங்களில் அதாவது வடபிராந்தியம், வடமத்திய பிராந்தியம், மத்திய பிராந்தியம், தெற்கு மற்றும் மேற்கு பிராந்தியங்களில் தனது சேவைகளை ஆற்றிவருகின்றது.

அந்தவகையில் வடமத்திய பிராந்தியத்தில் வவுனியா, திருகோணமலை, முல்லைத்தீவு, மன்னார், அனுராதபுரம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் சத்யசாயி நிறுவனம் பல்வேறுபட்ட கல்வி, ஆன்மீகம் மற்றும் சேவைதிட்டங்களை பல நெருக்கடியான சூழ்நிலைகளிலும் செய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.