அரசியல் கைவிட்டது : மீண்டும் வௌ்ளித்திரைக்கு திரும்புவாரா ரம்யா?

431

Kannada Actress Ramya Latest Cute Smile Stills

காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நடிகை ரம்யா மஜத வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். கர்நாடக மாநிலம் மண்டியா தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் ரம்யா வெற்றிபெற்று எம்.பியானார்.

ஆறே மாதங்களில் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தது. இருப்பினும் அவரால் வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. மஜதவின் புட்டசாமியிடம் 10 ஆயிரத்து 213 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஊர் திரும்பிய, நடிகரும் கர்நாடக அமைச்சருமான அம்பரீஷ், ரம்யாவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மண்டியாவை சேர்ந்த அம்பரீஷின் பிரச்சாரத்தையும் மீறி ரம்யா தோல்வியை தழுவியுள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் தளத்தில் ரம்யா கூறுகையில், புட்டராஜுவுடன் போராடி தோற்றுள்ளேன். அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மக்கள் பணிகளை தொடர்ந்து ஆற்றுவேன் என்றார்.

இனிமேல் ரம்யாவை மீண்டும் வெள்ளித்திரையில் பார்க்கலாம் என இரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.