அமெரிக்காவில்..
அமெரிக்காவில், மருத்துவர்களிடம் தான் தயாகப் போகிறார் எனற செய்தியை கேட்ட இளம் பெண்ணுக்கு, கூடவே லொட்டரியில் ஜாக்பாட் அடித்த செய்தியும் இரட்டை மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலாந்தில், தன்னை துரதிர்ஷ்டவசமாக நம்பிய இந்த இளம் பெண் இப்போது லக்கி மம்மா (அதிர்ஷ்டசாலி தாய்) என்று வர்ணிக்கபடுகிறார். தனது சுய விவரங்களை வெளியிட விரும்பாத அந்த இளம்பெண், தான் தாயக போகிற செய்தியை மருத்துவர்களிடமிருந்து கேட்ட சில மணி நேரங்களிலேயே, தனக்கு மற்றோரு அதிர்ஷ்ட வெற்றி கிடைத்திருப்பதை அறிந்தார்.
தனது குழந்தையின் வருகையால் தனக்கு இல்லாத அதிர்ஷ்டம் முழுமையாக வந்து சேரும் என நம்புகிறாள் அந்த இளம் பெண். அவருக்கு லொட்டரி அடித்தாலும், தனது மற்ற விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை. லொட்டரியில் கூட அதிர்ஷ்டசாலி அம்மா என்று எழுதப்பட்டுள்ளது.
அந்த பெண்ணுக்கு 50,000 அமெரிக்க டொலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. இலங்கை பணமதிப்பின்படி, 1 கொடியே 84 லட்சம் ரூபாயாக்கு மேல் வரும். இதனால், தனது தனிப்பட்ட தகவல்களை வெளியிட வேண்டாம் என இளம்பெண் முடிவு செய்துள்ளார்.
ஒரே நாளில் இரண்டு பரிசுகள் கிடைத்ததாக அந்தப் பெண் கூறுகிறார். அது உண்மையிலேயே அற்புதமான நாள். தனக்கு லொட்டரி அடித்ததை, நம்ப முடியவில்லை என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இந்த பணத்தை ஒரு சிறந்த விடுமுறைக்கு செல்ல அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறினார். மீண்டும் தாயாகப் போகிறேன் என்று தெரிந்த நாளில் லாட்டரி அடித்ததை மறக்க முடியாது என்று அவர் கூறினார்.