தேர்தலில் படுதோல்வி : குஜராத்தில் காங்கிரஸ் அமைப்புகள் கூண்டோடு கலைப்பு!!

1336

Cong

பாராளுமன்ற தேர்தலில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக குஜராத் தலைநகர் அகமதாபாத் மற்றும் ராஜ்கோட், வதோதரா, சூரத் ஆகிய நகரங்களுக்குட்பட்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிளைகள் கலைக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது.

மேற்கண்ட நகரங்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சுமார் 2 இலட்சம் முதல் 5 இலட்சம் வரையிலான வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததன் எதிரொலியாக இந்த அதிரடி நடவடிக்கையில் கட்சி தலைமை இறங்கியுள்ளது.

நகர அமைப்புகள் மட்டுமின்றி, இந்நகரங்களுக்கு உட்பட்ட சட்டமன்ற, வார்டு குழு அமைப்புகளும் கலைக்கப்பட்டுள்ளன. எனினும், மேற்கண்ட நகரங்களின் மாவட்ட தலைவர்கள் மட்டும் தங்களின் பதவிகளில் தொடர்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.