வவுனியாவில் வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

1047

வீதிகளில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு..

வவுனியா புகையிரத நிலைய வீதியில் குப்பைகளை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.



பல நூற்றுக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் இப்பிரதேசங்களில் சில குறுகிய எண்ணம் கொண்ட மனிதர்கள் தம் குழந்தைகளின் மலக்கழிவுகளையும், மாமிச கழிவுகளையும் வீசுவதால் வீதியோரங்களில் துர்நாற்றம் வீசுவதுடன் வீதியை பயன்படுத்தும் மக்களுக்கும் தொற்றுநோய்கள் உருவாகும் நிலையும் தோன்றியுள்ளது.

குறித்த வீதியில் குப்பைகளை வீசிச் செல்வது அதிகரித்த நிலையில், அப்பகுதிகளிலுள்ள அலுவலகங்கள் மற்றும் குடியிருப்புகளில் உள்ள சி.சி.ரி.வி. காணொளிகள் பரிசோதிக்கப்பட்டு வீதியில் குப்பைகளை வீசிச் செல்பவர்களின்,

மோட்டார் சைக்கிள் இலக்கம், முச்சக்கர வண்டி இலக்கம் ஆகியன பதிவாகியுள்ளமையுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவதற்கும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

மேலும், வீதிகளில் குப்பைகள் வீசப்படும் அனைத்து பகுதிகளிலும் இரகசிய அவதானிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.