கேரளாவில்..
கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் விஷம் குடித்த நிலையில் சில நாள் இடைவெளியில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொடுபுழாவை சேர்ந்தவர் ஆண்டனி (62).
இவர் மனைவி ஜெசி (56). தம்பதியின் மகள் சில்னா (21) ஆண்டனி பேக்கரி கடை நடத்தி வந்தார். அவரின் குடும்பத்தாருக்கு பண பிரச்சனை ஏற்பட்ட நிலையில் பல இடங்களில் கடன் வாங்கியிருந்தனர். வீட்டு வாடகையும் கொடுக்க முடியாமல் ஆண்டனி சிரமப்பட்டார்.
இதையடுத்து விரக்தியில் குடும்பத்தார் 8 நாட்களுக்கு முன்னர் விஷம் குடித்து வீட்டில் சரிந்து விழுந்தனர். பின்னர் மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு ஜெசி முதலில் உயிரிழந்தார். பின்னர் அடுத்த சில நாட்களில் ஆண்டனி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
தொடர்ந்து சில்னாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.