23 வயதுப் பெண்ணை திருமணம் செய்த 65 வயது முதியவர் : விமர்சையாக நடந்த திருமணம்!!

443

உத்தர பிரதேசத்தில்..

உத்தர பிரதேச மாநிலம் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள ஹுசைனாபாத் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் நக்கத் யாதவ். இவருக்கு தற்போது 65 வயதாகிறது.



மேலும் இவருக்கு 6 மகள்களும் உள்ளனர். இந்த ஆறு பேருக்கும் திருமணமாகி அவர்கள் தங்களின் கணவர்களுடன் வசித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றது.

தனது ஆறு பெண்களுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்து வைத்த நக்கத் யாதவின் மனைவி சில ஆண்களுக்கு முன்பு உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

மனைவியின் பிரிவின் காரணமாக தனிமையில் இருந்து வந்த நக்கத் யாதவிற்கு அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

அப்படி இருக்கையில் தன்னுடைய வாழ்க்கையில் ஒரு துணை வேண்டும் என்றும் முடிவு எடுத்துள்ளார் நக்கத் யாதவ். இந்த நிலையில் தான் அவரைவிட சுமார் 42 வயது குறைவான 23 வயதே ஆகும் நந்தினி என்ற இளம்பெண், நக்கத்தை திருமணம் செய்து கொள்ள முன் வந்துள்ளார்.

நக்கத் யாதவிற்கு நந்தினியை பிடித்து போக இருவரும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். இந்த நிலையில், நக்கத் யாதவின் ஆறு மகள்களும் இந்த திருமணத்திற்கும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, நந்தினியின் வீட்டாரும் திருமணத்திற்கு சம்மதம் கூறியதையடுத்து இரு வீட்டாரின் முழு சம்மதத்துடன் அயோத்தி மாவட்டத்தில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து, இளம் பெண் நந்தினி மற்றும் நக்கத் யாதவ் ஆகியோரின் திருமணம் நடைபெற்றுள்ளது.

வழக்கமான திருமணம் போல ஆட்டம், பாட்டம் என நக்கத் யாதவின் திருமணம் படு ஜோராக நடந்து முடிந்திருந்தது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

இந்த திருமணம் பற்றி பேசும் நந்தினி தனக்கு இந்த கல்யாணம் மகிழ்ச்சியாகவே உள்ளதாகவும், வயது வித்தியாசம் ஒரு பொருட்டே இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.