மாப்பிள்ளை செய்த செயலால் திருமணம் முடிந்த கையோடு ஃபயர் ஸ்டேஷன் போன ஜோடி : வைரலாகும் பின்னணி!!

639

கேரளாவில்..

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடப்பாகடா என்னும் பகுதியில் வைத்து சமீபத்தில் ஒரு திருமணம் நடந்துள்ளது. விஷ்ணு மற்றும் ஹர்ஷா ஆகிய மணமக்களுக்கு ஒரு மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.



இந்த நிலையில், திருமணம் சடங்கு ஒன்றிற்காக மணப்பெண்ணின் கை விரலில் மோதிரம் ஒன்றையும் மாப்பிள்ளை விஷ்ணு அணிந்துள்ளார். அந்த சமயத்தில் அளவெடுத்த விரலில் அந்த மோதிரத்தை அணிவதற்கு பதிலாக, வேறு ஒரு விரலில் விஷ்ணு மோதிரத்தை அணிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ஹர்ஷா விரலில் அணியப்பட்ட மோதிரம் காரணமாக அவரது விரல் வீங்க தொடங்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக வலியிலும் ஹர்ஷா துடித்துள்ள நிலையில் மோதிரத்தை கழட்டுவதற்காக பலமுறை முயன்றும் அந்த முயற்சிகள் அனைத்தும் வீணாய் போனதாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த நிலையில், திருமணம் முடிந்த கையுடன் மாப்பிள்ளை மற்றும் மணப்பெண் ஆகிய இருவரும் அங்கிருந்து அருகே உள்ள ஃபயர் ஸ்டேஷன் ஒன்றிற்கும் சென்றுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து, அங்கிருந்த அதிகாரிகள் உதவியுடன் நைலான் நூலை பயன்படுத்தி கொஞ்ச நேர போராட்டத்திற்கு பின் மோதிரத்தை கழட்டி உள்ளனர்.

திருமண மண்டபத்தில் இருந்து நேராக ஃபயர் ஸ்டேஷன் சென்ற மணமக்கள் தொடர்பான புகைப்படங்களை அங்கே இருந்த புகைப்பட கலைஞர்கள் தங்கள் கேமராவிலும் பதிவு செய்துள்ளனர்.

அத்துடன் திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் இருவரும் ஃபயர் ஸ்டேஷன் செல்வது தொடர்பான வீடியோ காட்சிகளும் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.