அகில இலங்கை சைவமகா சபையினர் வருடா வருடம் வழங்கும்”அன்பே சிவம்” விருது வழங்கும் விழா கடந்த 05.02.2022 ஞாயிற்றுக்கிழமை வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் காஞ்சி சிவ மட மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி நிகழ்வின் போது 2022 ஆம் ஆண்டுக்கான அன்பே சிவம் விருது தன்னலமற்ற உன்னத சிவப்பணியும் அறப்பணியும் ஒருங்கே ஆற்றும் கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில், தர்மகர்த்தாவும் அகிலாண்டேஸ்வரி அருளகம், மற்றும் சிவன் முதியோர் இல்லம் என்பவற்றின் ஸ்தாபகருமான சிவத்திரு.ஆறுமுகம் நவரெட்ணராசா அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.
அகில இலங்கை சைவமகா சபையின் தலைவர் சிவத்திரு. நா. சண்முகரத்தினம் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக திருமிகு.தி.திரேஷ்குமார் (மேலதிக அரச அதிபர்- வவுனியா) மற்றும் கௌரவ விருந்தினராக சிவத்திரு.நா.தர்மராசா (தமிழ்மணி அகளங்கன் இந்துமாமன்றம் -வவுனியா)மற்றும் சிறப்பு விருந்தினர்களாக திருமதி.பிரியதர்சினி சஜீவன் (உதவி பிரதேச செயலர் வவுனியா) சி.சுதாகரன் (மனநல மருத்துவர், பொது வைத்தியசாலை வவுனியா) திருமிகு.செ.சந்திரகுமார் தலைவர், தமிழ் விருட்சம்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேற்படி நிகழ்வில் தவத்திரு.அகத்தியர் அடிகளார் (தென்கயிலை ஆதீனம் -திருகோணமலை) மற்றும் தவத்திரு.உமாபதிசிவம் (மெய்கண்டார் ஆதீனம் -கீருமலை) ஆகியோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கியதுடன் மருத்துவர். பரா நந்தகுமார் ( அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச் செயலாளர்) கலந்து கொண்டு அன்பே சிவம் விருது தொடர்பான அறிமுகவுரையினை வழங்கியிருந்தார்.