சட்டீஸ்கரில்..
ஆசையாக வளர்த்த நாய் உயிரிழந்ததால் பெண் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சட்டீஸ்கர் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தீயுள்ளது. பொதுவாக அநேக மனிதர்கள் செல்லப்பிராணியாக நாய், பூனை இவற்றினை வளர்ப்பதில் அதிகமாக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
அவற்றினை பாசமாக வளர்த்து வருவதையும் அவதானித்திருப்போம். சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா பகுதியைச் சேர்ந்த ரிச்சா சோந்தியா(20) என்ற இளம்பெண் நாய்க்குட்டி ஒன்றினை வளர்த்து வந்துள்ளார்.
மிகவும் பாசமாக வளர்த்துவரும் நிலையில், இதுகுறித்து நண்பர்கள், உறவினர்கள் அனைவரிடமும் மகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ரிச்சா வளர்ந்துவந்த நாயின் உடல்நிலை பாதிப்படைந்துள்ளதால்,
அதற்கான சிகிச்சையும் கொடுத்துள்ள நிலையில் நாய் திடீரென மரணமடைந்துள்ளது. இதனால் பெரும் சோகமடைந்த ரிச்சா தனது நண்பர்களிடத்தில் இது பற்றி வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். நேற்று வீட்டிலிருந்த ரிச்சா வெகுநேரம் ஆகியும் அறையை திறக்காமல் உள்ள நிலையில்,
தாய் சென்று அவதானித்த போது, உயிரை மாய்த்துக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்பு பொலிசாருக்கு தகவல் கொடுத்த நிலையில், விரைந்து வந்த பொலிசார் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
செல்லமாக வளர்த்த நாய் மரணமடைந்ததால் இளம்பெண் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.