கடன் வாங்கி மகனை கனடாவுக்கு அனுப்பிய விவசாய குடும்பம் : இறுதியில் நடந்த சோகம்!!

1072

பஞ்சாபில்..

மகன் கனடாவில் படித்து நல்ல நிலைமைக்கு வந்து தங்களையும் கவனித்துக்கொள்வான் என நம்பியிருந்த அந்தக் குடும்பத்துக்கு தற்போது ஒரு துயரமான செய்தி கிடைத்துள்ளது.

பஞ்சாபிலுள்ள Mansa மாவட்டத்தில் அமைந்துள்ளது Bakhshiwala கிராமம். அந்தக் கிராமத்திலுள்ள விவசாயக் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் குர்ஜோத் சிங் (Gurjot Singh, 19).

ஜனவரி மாதம் 11ஆம் திகதிதான் குர்ஜோத் சிங் கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்றார். சர்ரேயில் தங்கியிருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே மகனை கனடா அனுப்புவதற்காக வாங்கிய கடனை எப்படி அடைப்பது என்ற கவலையிலிருக்கும் அந்தக் குடும்பத்தினர், தங்கள் மகனுடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அரசின் உதவியை நாடியுள்ளனர்.