வியாசர்பாடியில்..
மதுபழக்கத்தால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றன. முன்பெல்லாம் பணிக்கு செல்பவர்கள், கடின உழைப்பாளிகள் மட்டுமே குடித்து வந்த நிலையில் தற்போது பள்ளி மாணவ , மாணவிகள் தொடங்கி ரோட்டோரத்தில் நின்று பிச்சை வாங்கி உண்பவர்கள் வரை மதுப்பழக்கத்தால் சீரழிந்து வருகின்றனர்.
சின்னஞ்சிறு வயதிலேயே மதுப்பழக்கத்திற்கு அடிமையாகும் இவர்கள் பல நேரங்களில் விபரீதங்களை செய்து விடுகின்றனர். இதனால் இவர்களின் எதிர்காலமே கேள்விக்குறியாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வியாசர்பாடி சாஸ்திரி நகர் 11வது தெருவில் வசித்து வருபவர் 50 வயதான அப்புனு. இவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி 45 வயது கண்ணகி. இவர்களின் மகள் மகள் அமலாவுக்கு திருமணமாகி விட்டது.
இவர்களின் இளையமகள் 22 வயது அஜய் ரயில்வே ஒப்பந்த பணிகளில் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் குடித்து விட்டு பணிக்கு சென்றதால் ஒப்பந்ததாரர்கள் வேலையை விட்டு நிறுத்தியுள்ளர்.
தற்போது வேலை எதுவும் இல்லாமல் தினமும் தாயை மிரட்டி பணம் வாங்கி குடித்துவிட்டு தாஊர் சுற்றி வருகிறார். வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு தாயிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.
அதிகாலை 4 மணி வரை இவரின் தகராறு தொடர்ந்தது. ஆனால் தாயார் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லூசு அஜய், கையில் வைத்திருந்த பீர்பாட்டிலை உடைத்து தாயின் தலை, முகம் என சராமாரியாக குத்த தொடங்கினார்.
இத கோர தாக்குதலில் படுகாயமடைந்த கண்ணகி வலி தாங்க முடியாமல் அலறி துடித்தார். அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கண்ணகியை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அஜய்யை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், மகா சிவராத்திரி வருவதால், சிவபெருமானுக்கு வேண்டிக்கொண்டு மாலை அணிந்து, குடிக்காமல் இருக்கும்படி லூசு அஜயிடம் கண்ணகி கூறினார். தாயின் பேச்சை கேட்டு லூசுஅஜய்யும் சிவராத்திரிக்காக மாலை அணிந்து 2, 3 நாட்கள் குடிக்காமல் இருந்து வந்தார்.
மாலை அணிந்து கொண்டே அவர் குடிக்க தொடங்கியதால், தாய் கண்ணகி மாலை அணிந்து குடிக்க வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த லூசு அஜய் பீர்பாட்டிலால் தாயை குத்தியதாக முதல் கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கண்ணகி பிப்ரவரி 8ம் தேதி இரவு 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாமிக்கு மாலை போட்டுக் கொண்டால் மகன் திருந்தி விடுவான் என்பதால் சிவராத்திரிக்கு மாலை அணிந்து மகனை திருத்த முயற்சி செய்தார். ஆனால் அதே மகனாலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.