அந்தரங்க உறுப்பில் தாக்குதல்.. இரும்பு கம்பியில் சூடு : சிறுமியை கொடுமை செய்த தம்பதி!!

700

டெல்லியில்..

வீட்டு வேலைக்கு வந்த சிறுமி கொடூரமாக டார்ச்சர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வீட்டு வேலைக்கு இருந்த மைனர் பெண்ணை கொடூரமாக சித்திரவதை செய்து பாலியல் டார்ச்சர் செய்த டெல்லி தம்பதியை போலீசார் இப்போது கைது செய்துள்ளனர்.



இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவரும் வேலையையும் இழந்துள்ளனர். இந்தியாவில் மைனர் குழந்தைகளை எந்தவொரு ஆபத்தான வேலைகளுக்கும் பயன்படுத்தக் கூடாது என்று விதி இருக்கிறது. இருந்த போதிலும் பல நேரங்களில் இந்த விதியை கடைப்பிடிப்பதில்லை.

அதுபோன்ற ஒரு சம்பவம் தான் ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் நடந்துள்ளது. வீட்டு வேலைக்குச் சென்ற மைனர் சிறுமியை அந்தரங்க உறுப்பில் எல்லாம் அடித்துக் காயப்படுத்தியுள்ளது ஒரு ஜோடி.

‛செக்ஸ்’ டார்ச்சர்.. கல்லூரி பேராசிரியையிடம் ஆபாசம் காட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. டெல்லி ஷாக் ‛செக்ஸ்’ டார்ச்சர்.. கல்லூரி பேராசிரியையிடம் ஆபாசம் காட்டிய பாகிஸ்தான் தூதரக அதிகாரி.. டெல்லி ஷாக்

ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராமில் வீட்டு வேலை செய்து வந்த மைனர் சிறுமியைச் சித்திரவதை செய்து, பாலியல் டார்ச்சர் செய்ததாக குருகிராமத்தை சேர்ந்த தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்.. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே அந்த தம்பதி தங்கள் வேலைகளை இழந்துள்ளனர். அந்த பெண் பணிபுரிந்த பிஆர் நிறுவனமும் அவரது கணவர் பணிபுரிந்த இன்சூரன்ஸ் நிறுவனம் இருவரையும் வேலையை விட்டு நீக்குவதாக அறிவித்துள்ளது.

அந்த சிறுமி ஜார்க்கண்டில் உள்ள ராஞ்சியைச் சேர்ந்தவர் ஆவார். வேலை வாய்ப்பு நிறுவனம் ஒன்றின் மூலம் அவருக்கு இந்த வேலை கிடைத்துள்ளது.. இருப்பினும், குருகிராமில் அங்கு வேலைக்குச் சென்றது முதலே அந்த 17 வயது சிறுமிக்குப் பெரிய டார்ச்சர் தான்..

அந்த தம்பதி தினசரி அந்த சிறுமியை இரக்கமின்றி அடித்துத் துன்புறுத்தியுள்ளனர் என்று அந்த சிறுமியை மீட்ட சகி மையத்தின் பொறுப்பாளர் பிங்கி மாலிக் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

மேலும், தலைநகர் டெல்லியில் உள்ள ஜார்கண்ட் பவன் அதிகாரியும் அந்த சிறுமி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு நேரில் சென்று அவரை சந்தித்துள்ளார். சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் வாயில் பல காயங்கள் இருந்துள்ளன.. வாய் பகுதியில் பயங்கர வீக்கம் காணப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக குருகிராமில் நியூ காலனியில் வசிக்கும் மணீஷ் கட்டார் (36) மற்றும் அவரது மனைவி கமல்ஜீத் கவுர் (34) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதற்கிடையே அந்த தம்பதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.

அந்த சிறுமியை அவர்கள் இரவில் கூட தூங்க விடமாட்டார்களாம்.. மேலும், சிறுமி சாப்பிடவும் உணவு கொடுக்க மாட்டார்களாம்.. சிறுமியின் வாய் பகுதி கடுமையான காயத்தால் வீங்கியிருந்ததாகவும் சிறுமியின் உடலில் அனைத்து இடங்களிலும் காயங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்..

கடந்த ஐந்து மாதங்களாகவே இதுபோன்ற டார்ச்சர்கள் தொடர்வதாகத் தெரிகிறது. ஒவ்வொரு நாளும் அவர்கள் தன்னை அவமானப்படுத்தியதாகவும் சூடான இரும்பு மூலம் சூடு வைத்தாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மணீஷ் கட்டர் சிறுமியின் ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக்கி, அந்தரங்க உறுப்புகளில் காயப்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். அந்த சிறுமியை வீட்டியேலே அடைத்து வைத்திருந்த அந்த தம்பதி, யாரிடமும் பேசக் கூடாது என்றும் கண்டிஷன் போட்டுள்ளனர்.

இது தொடர்பாக அந்த தம்பதி மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே மைனர் பெண்ணை வேலைக்கு அனுப்பிய அந்த வேலைவாய்ப்பு ஏஜென்சியிடமும் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தச் சம்பவம் குறித்து டெல்லி போலீசார் கூறுகையில், “வேலைவாய்ப்பு நிறுவனத்திலும் நாங்கள் சோதனை நடத்தியுள்ளோம். வீட்டு வேலையில் அந்த சிறுமி சிறு தவறு செய்துவிட்டதாகவும் இதனால் கோபமடைந்து இப்படிச் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், சிறுமியின் சொந்த மாநிலமான ஜார்கண்ட் மாநில முதல்வரும் இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.