விழுப்புரத்தில்..
அனாதை என முகநூலில் பழகிய பெண், மூன்று மாதம் பழகி திருமணம் செய்து கொண்ட நிலையில், ஒரு மாதத்தில் நகை பணத்துடன் தப்பிய பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் தாலுகா சிறுதலைப்புண்டி கிராமத்தில் வசித்து வருபவர் மணிகண்டன். விவசாயக் கூலி வேலை செய்து வரும் இவருக்கு, முகநூலின் மூலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.
இருவருக்கும் காதல் மலர்ந்த பின் ஒரு அனாதை எனக்கூறிய அப்பெண் தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனையடுத்து மணிகண்டன் அவரது தாய் ராணியிடம் முகநூலின் மூலம் காரைக்கால் திருவிடைக்கழி பகுதியை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்னை காதலிப்பாதாகவும், அனாதையான அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து மகனின் ஆசையை நிறைவேற்ற தாய் மகனுடன் சேர்ந்து காரைக்கால் சென்று அப்பெண்ணை அழைத்து வந்து தனது சொந்த கிராமமான சிறுதலைப் பூண்டி கிராமத்தில் கடந்த நவம்பர் 18ஆம் தேதி, அவலூர்பேட்டை முல்லை நகரில் உள்ள அங்காளம்மன் திருக்கோயிலில் மணிகண்டனின் பெற்றோர் மற்றும் உறவினரின் ஆசியுடன் திருமணம் செய்துவைத்துள்ளனர்.
மணப்பெண்ணிற்கு எட்டு பவுன் நகையை சீராக மணமகன் விட்டாரே அளித்து மகனின் காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றியுள்ளார் மணிகண்டனின் தாய்.
மகிழ்ச்சியுடன் ஒரு மாதம் மணிகண்டனுடன் சந்தோஷமாக இருந்த பெண் திடீரென டிசம்பர் 11ஆம் தேதி மணிகண்டன் மற்றும் அவர் பெற்றோர் விவசாயிக்கு நிலத்திற்கு சென்றிருந்த நேரத்தில் எட்டு சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
காரில் கிராமத்திலிருந்து தப்பி சென்றதாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஒரு மாதம் மட்டுமே குடும்ப நடத்திய மகாலட்சுமி முகநூலில் அறிமுகமாகி காதல் திருமணம் செய்து மணமகன் குடும்பத்தை ஏமாற்றி நகைகள் மற்றும் பணத்தை அபகரித்து தப்பி சென்றதால் ஏமாற்றமடைந்த காதல் கணவன் மணிகண்டன் பெரும் ஏமாற்றத்தில் வளத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் அங்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில், செஞ்சி சரக காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திருமணம் செய்த போட்டோ உள்ளிட்ட ஆதாரங்களை கொடுத்து அப்பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்துள்ளார்.