அஞ்சலி நிகழ்வு ..

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் உயிரிழந்த பொதுமக்களிற்கான அஞ்சலி நிகழ்வு வவுனியாவில் நேற்று (11.02.2023) இடம்பெற்றது.

வவுனியா வாடிவீட்டு மண்டபத்தில் தமிழ் விருட்சத்தின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், உயிரிழந்த பொதுமக்களின் நினைவாக அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், மெழுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வில் எம்.ஜி,ஆர் நற்பணி மன்றத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராஜா, முன்னாள் நகரசபை உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், அரசியல் தரப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






