ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி…
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும் தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தல் செயற்றிட்டமும் வவுனியா முதலாம் குறுக்குத்தெரு வீதியிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று (13.02) மதியம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாநகர சபை, வவுனியா வடக்கு, செட்டிக்குளம், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டு, தேர்தலுக்கான ஆயத்தப்படுத்தும் வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இச் சந்திப்பில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சர்வதேச இணைப்பாளர் சஜீன் வாஸ் ஆகியோருடன் கட்சியின் மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.