மேற்கு வங்கத்தில்..
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்துள்ளார்.
மத்தியில் ஆட்சி செய்யும் பாஜகவையும், பிரதமர் மோடியையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானார்ஜி கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ். பாஜகவினரிடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேற்கு வங்கம் தெற்கு 24 பர்கானாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தவர் சுசித்ரா மண்டல்(48). இவர் உருளைக்கிழங்கு வயலுக்குள் நேற்று இரவு வெட்டிக்கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவரின் தொண்டையில் ஆழமான வெட்டுக்காயம் இருந்தது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார்,சுசித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரசியல் ரீதியாக இந்த கொ.லை நடந்ததாக போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆளுங்கட்சி தொண்டர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.