மும்பையில்..
திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை ராக்கி சாவந்தின் கணவர் மீது ஈரான் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
1997 ஆம் ஆண்டு பாலிவுட்டில் அறிமுகமானார் ராக்கி சாவந்த். கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த அவர் 2009ஆம் ஆண்டு சுயம்வரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒரே நைட்டில் பிரபலமானார்.
திருமண வரன்களை தேர்வு செய்யும் இந்த நிகழ்ச்சியில் ராக்கி சாவந்த் கணவராக தேர்வு செய்யப்பட்டவரை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியரை மணந்து கொண்டார்.
இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்படவே 2022 ஆம் ஆண்டு விவாகரத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் அடில்கான் துரானியை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக ராக்கி சாவந்த் அறிவித்தார்.
இந்த நிலையில் ராக்கியின் தாய் புற்றுநோயால் அண்மையில் இறந்துவிட்டார். அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த போதுதான் ராக்கிக்கும் அடிலுக்கும் திருமணம் நடந்தது.
திருமணமாகி ஒரு மாதம் ஆன நிலையில் தன்னை அடில் கான் அடித்து துன்புறுத்துகிறார் என போலீஸில் புகார் அளித்தார். மேலும் தன் மீது ஆசிட் வீசிவிடுவதாகவும் விபத்தை தானே ஏற்படுத்தி கொலை செய்து விடுவதாகவும் தன்னை அடில் மிரட்டுகிறார் என ராக்கி சாவந்த் புகார் அளித்தார்.
அது மட்டுமல்லாமல் தன்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார் என்றும் ராக்கி கண்ணீர் விட்டார். இந்த நிலையில் ராக்கி சாவந்தின் கணவர் அடில் கானை மும்பை ஓஷிவோரா போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கணவர் மீதான புகாரை அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது மயங்கி விழுந்தார் ராக்கி சாவந்த் . இதையடுத்து ராக்கியை கைத்தாங்கலாக அழைத்து சென்று காரில் உட்கார வைத்தனர். ராக்கி குறித்து தினமும் ஒரு செய்தி வருகிறது.
அந்த வகையில் தன்னை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதை விற்பனை செய்து அடில் பணம் சம்பாதித்துள்ளார் என ராக்கி கதறினார். அத்துடன் அடில் தன்னை விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காகவே இது போல் தன்னை டார்ச்சர் செய்கிறார் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அடில் துரானி மீது மைசூரு வி.வி.புரம் போலீஸில் ஈரான் நாட்டு பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மைசூருவில் உள்ள மருத்துவ கல்லூரியில் தங்கி மருத்துவம் படித்து வருகிறேன். எனக்கும் அடில் கானுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அது காதலாக மாறியது. இதனால் இருவரும் காதலித்து வந்தோம். பின்னர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருக்கமாக பழகி என்னுடன் பாலியல் ரீதியில் உறவு கொண்டார். ஆனால் இந்த உறவு கொண்டதன் பிறகு என்னுடன் பழகுவதை அடில் துரானி நிறுத்திக் கொண்டார்.
என்னை திருமணம் செய்ய மறுக்கிறார். அத்துடன் வற்புறுத்தினால் அவருடன் நெருக்கமாக இருந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என மிரட்டுகிறார். எனவே அடில் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதையடுத்து போலீஸார் அடில் மீது பாலியல் வன்கொடுமை, மிரட்டல் என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.