திருமணமான மூன்றே நாட்களில் புதுமணத் தம்பதிக்கு நேர்ந்த சோகம்.. கதறும் குடும்பம்!!

520

ஆந்திராவில்..

இந்திய மாநிலம் ஆந்திராவில் புதிதாக திருமணம் செய்த ஜோடி சாலை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பினு(27). இவருக்கும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரணிதா(22) என்ற பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடைபெற்றது.



அதனைத் தொடர்ந்து தனது மாமியார் வீட்டிற்கு விருந்துக்காக மனைவியை இருசக்கர வாகனத்தில் பினு அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த டிராக்டர் மீது அவர்கள் சென்ற வாகனம் மோதி விபத்திற்குள்ளானது.

கொலந்தரா என்ற பகுதியில் நடந்த இந்த கோர விபத்தில் புதுமணத் தம்பதி தூக்கி வீசப்பட்டனர். அதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் சாரதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான மூன்றே நாட்களில் புதுமணத் தம்பதி சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.