திருநம்பியாக மாறிய பெண்ணை காதலர் தினத்தில் கரம்பிடித்த இளம்பெண்!!

553

ஈரோட்டில்..

தமிழக மாவட்டம் ஈரோட்டில் திருநம்பியை இளம் பெண்ணொருவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் அருணாதேவி. பட்டாதாரியான இவர் அருண் பாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

அருண் பாஷ் பெண்ணாக இருந்து திருநம்பியாக மாறியவர். இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அருணாதேவி, அருண் பாஷ் ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன் பின்னர் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த காதல் ஜோடி, காதலர் தினமான இன்று இல்லற வாழ்வில் இணைந்தது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி இருவரும் சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.