மாடியில் இருந்து விழுந்த குழந்தைக்கு நேர்ந்த சோகம்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

420

சென்னையில்..

சென்னை கொடுங்கையூர் காந்தி நகரில் பிரபாகரன் ( 28), சந்தியா (26) தம்பதி வசித்து வருகின்றனர். இளம் தம்பதியான இவர்களுக்கு 8 வயதில் சந்தோஷ், இரண்டரை வயதில் துர்கேஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இரண்டு குழந்தைகளும் வீட்டில் விளையாடியுள்ளனர்.



இந்த நிலையில், நேற்று முன்தினம் சந்தியா தன் தாய் வீட்டிற்கு குழந்தை துர்கேஷுடன் சென்றுள்ளார். அன்று இரவு சந்தியா தனது பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தபோது, வீட்டின் முதல் தளத்தில் உள்ள படுக்கை அறையில் துர்கேஷ் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை ஜன்னல் வழியாக கீழே விழுந்துள்ளது. இதனை பார்த்த சந்தியா பெரும் அதிர்ச்சி அடைந்தார். கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த குழந்தையை மீட்டு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்துவந்போதும் உடல்நிலை மோசமானதால் நேற்று மேல் சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது.

அங்கு குழந்தையின் உயிரை காப்பாற்ற அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.