திருச்சியில்..
திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த வைரிசெட்டிபாளையம் ஏரிக்காடு பகுதி சேர்ந்தவர் இளைஞர் கார்த்திக் (25). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரியான இளம் பெண் கிருஷ்ணவேணி (23) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் கார்த்திக் தனது மனைவியுடன் மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்றுள்ளார். தனது தாய் வீட்டுக்கு சென்ற புது மணப்பெண் கிருஷ்ணவேணி செய்த செயல் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
அதாவது, தாய் வீட்டில் தனது தாலியை கழட்டி வீட்டில் வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். செல்போனும் அணைத்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் கார்த்திக் மனைவியை தேடியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் தேடியும் கிடைக்காததால், கணவர் கார்த்திக், உப்பிலியபுரம் காவல் நிலையத்தில் மனைவியை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.
திருமணமான 20 நாட்களில் இளம்பெண் மாயமான விவகாரத்தில் அவரை யாரேனும் கடத்திச் சென்றார்களா? அல்லது காதல் விவகாரத்தில் அவரே வீட்டை விட்டு வெளியேறினாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.