டீக்கடை லாபத்தில் 91 லட்சத்திற்கு பென்ஸ் கார்.. சாதித்துக்காட்டிய பட்டதாரி இளைஞன்!!

552

டீக்கடையில்..

எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை நடத்தும் இளைஞர், தனது வியாபாரத்தில் ஈட்டிவரும் பெரும் லாபத்தில் இப்போது ரூ.91 லட்சம் மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளார்.



அவர் மெர்சிடிஸ் ஆடம்பர கார் வாங்கியுள்ள வீடியோவை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப படிப்புகளை படித்துவிட்டு மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளத்திற்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் கூட, இக்காலகட்டத்தில் எப்பொழுது தங்களது வேலை பறிபோகும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

சமீபத்தில், கூகுள் போன்ற உகலளவில் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவங்கங்களில் வேலைபார்த்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்கள் வேலை இழந்து திண்டாடுவதைப் பார்க்கமுடிகிறது.

இந்த நிலையில், எம்பிஏ படித்து ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய நினைக்காமல், சொந்த தொழில் செய்ய முடிவு செய்த இந்திய இளைஞர் பிரபுல் பில்லோர் (Prafull Billore), டீக்கடை நடத்தி பெரும் லாபம் பார்த்துவருகிறார்.

முதலில் தனது டீக்கடையை சிறிய அளவில் தொடங்கிய பிரபுல், பின்னர் படிப்படியாக தனது கடையை விரிவுபடுத்தினார்.எம்பிஏ படித்துவிட்டு டீக்கடை தொடங்குவதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் உற்றார் உறவினர்கள் கேலி செய்தனர்.

ஆனால் அவர் அந்த கேலி கிண்டல்களை எல்லாம் காதில் வாங்காமல் தன்னுடைய டீக்கடையை பெரிய நிறுவனமாக மாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளில் கடுமையாக உழைத்தார்.

அவருடைய கடுமையான உழைப்பால் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்த பிரபுல், இன்று அவரது நிறுவனத்தின் தினசரி விற்பனையே லட்சக்கணக்கில் இருக்கும்படி இந்தியாவின் பல பகுதிகளில் தனதுடீக்கடை கிளைகளைக் கொண்டுள்ளார்.

டீக்கடை நடத்தியும் வாழ்க்கையில் பெரிய அளவில் வெற்றி பெறலாம் எனபதற்கு பலருக்கு முன் உதாரணமாக இருக்கும் பிரபுல் பில்லோர், சொந்தமாக ரூ. 91 லட்சத்திற்கு மெர்சிடிஸ் கார் வாங்கியுள்ளார்.

இன்ஸ்டாகிராமில் 1.5 மில்லியன் பின்தொடர்பாளர்களை வைத்துள்ள அவர் தனது புதிய ஆடம்பர காரின் வீடியோவை இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

அந்த பதிவில், முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை, கடின உழைப்பு மற்றும் உத்வேகம் இருந்தால் வெற்றி பெறலாம் என்பதற்கு தன்னுடைய வாழ்க்கை ஒரு சான்று என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.