என் உயிரே அவன்தான்… காதலனுக்காக உயிரைவிட்ட காதலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

341

சென்னையில்..

சென்னை ஆவடி அருகே ரயிலில் அடிப்பட்டு காதலன் இறந்த சோகத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். உலக காதலர்களால் கடந்த 14 ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், சென்னை அருகே காதலன் இறந்த துக்கம் தாங்காமல் காதலி தனது வாழ்க்கையையே முடித்துக்கொண்ட சம்பவம் மிகவும் உருக்கமாக உள்ளது.



சென்னை, ஆவடி அடுத்து கோவில்பாதகை பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (62) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகள் வினோதினி (22). இவர் வீட்டிலிருந்தே அழகப்பா யுனிவர்சிட்டியில் எம்பிஏ படித்து வந்தார்.

இவர் படிக்கும்போது இவருடன் படித்த கரிமேடு பகுதியை சேர்ந்த வசந்த் (25) என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 10ம் தேதி வசந்த் கும்மிடிப்பூண்டி அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

காதலன் அகால மரணம் அடைந்த செய்தியை கேட்ட வினோதினியின் மனதில் பேரிடியை இறக்கியது. ஒவ்வொரு நாளும் காதலனை குறித்து வருந்திக்கொண்டிருந்த வினோதினி காதலன் இல்லாத உலகில் நாம் மட்டும் ஏன் இருக்க வேண்டும் என்று நினைத்துவிட்டார்.

மன உளைச்சலில் இருந்த வினோதினி நேற்று முன்தினம் வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் அறையை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் வினோதினி வீட்டில் சென்று பார்த்த போது, வினோதினி படுக்க அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

அதை கண்டு பேரதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே ஆவடி டேங்க் பேக்டரி காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வினோதினியின் உடலை கீழே இறக்கி தடயங்களை சேகரித்து குறிப்பிகளை எடுத்துக்கொண்டனர்.

அதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து வினோதினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்குஅவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காதலன் இறந்த சோகத்தில், இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

காதலின் தோல்வியையும், காதலரின் இழப்பையும் தாங்கிக்கொள்ள முடியாத சோகத்தை கொடுத்தாலும், நம்மை பெற்றெடுத்து இந்த உலகில் வாழ்வதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுத்த தாய், தந்தையை மறந்து காதலனுக்காக தற்கொலை செய்துகொண்ட வினோதினியை போல வேறு யாரும் அந்த தவறை செய்யக்கூடாது என்று வினோதியின் குடும்பமே கைகூப்பி கேட்டுக்கொண்டனர்.