இளைஞன் வெட்டிக் கொலை : காதலியின் தந்தை கைது!!(படங்கள்)

638

காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கைகலப்பில் இளைஞன் ஒருவர் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். டிக்கோயா தரவளை தோட்டத்தில் இன்று மாலை 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில், உயிரிழந்தவர் செல்லையா செல்வரட்ணம் (18) என ஹற்றன் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞன் காதலித்த பெண்ணின் தந்தையே ( மருதமுத்து பாலகிருஷ்ணன்- வயது 42) இந்தக் கொலை செய்திருக்கலாம் என ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, நாளை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

1 2 3 4 5 6 7 8