பிரசவத்துக்கு சென்ற நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

942

ஆட்டையாம்பட்டியில்..

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி செல்லப்பன் வீதியில் கீர்த்திவர்மன் (26) – நிஷாந்தினி (22) தம்பதி வசித்து வந்தனர். இதில் கீர்த்திவர்மன் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து குடும்பம்தை வழிநடத்தி வந்தார்.

இந்த தம்பதிக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் நிஷாந்தினி மீண்டும் கர்ப்பமான நிலையில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவரை வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்கு நேற்று முன்தினம் சேர்த்தனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அறிவுரைப்படி, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர். பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த அவர், இரவில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனை கேட்டு நிஷாந்தினி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனை வளாகத்தில் அனைவரும் கதறி அழுதனர். அதேநேரம் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க தாமதம் செய்ததால்தான், நிஷாந்தினி இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் கீர்த்திவர்மன் புகார் அளித்தார். அதன்பேரில் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.