
14 வயது சிறுமியை பெற்றோரிடம் இருந்து பிரித்துச் சென்று 3 மாதங்கள் அவளுடன் குடும்பம் நடத்திய 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சிலாபம் – மஹவிலத்தவ பகுதியைச் சேர்ந்த சிறுவனே கைது செய்யப்பட்டுள்ளார்.
தமது மகள் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் காணாமல் போயுள்ளதாக பெற்றோர் சிலாபம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதன்படி, விசாரணை நடத்திய பொலிஸார் குறித்த சிறுவனையும் சிறுமியையும் வெயங்கொட பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர்.
காதல் விவகாரத்தால் சிறுவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வெயங்கொட பகுதி வீடொன்றில் வாடகைக்கு வசித்து வந்துள்ளதாக தெரியவருகிறது.
பெற்றோரிடம் இருந்து சிறுமியை கடத்திய குற்றச்சாட்டில் சந்தேகநபரான 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிலாபம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.





