வட மாகாண சபை அமைச்சர்கள், உறுப்பினர்களுடன் ஆலோசித்த பின்னரே முடிவு : சிவி.விக்னேஸ்வரன் பதில்!!

681

Vigneswaran

நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ள வருமாறு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பிற்கு உடனடி பதில் கூற முடியாது என வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அழைப்பு குறித்து சற்று நேரத்திற்கு முன்னரே வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தனக்கு அறிவித்ததாக விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

வட மாகாண சபை அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தனது முடிவை அறிவிக்க முடியும் என வட மாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன் சற்றுமுன்னர் தெரிவித்தார்.