புற்றுநோயை வென்ற 38 வயது நடிகை வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ!!

289


ஹம்சா நந்தினி..தெலுங்கு பட நடிகை ஹம்சா நந்தினி புற்றுநோயில் இருந்து மீண்டு வந்ததை வெளிக்காட்டும் வகையில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். தெலுங்கு திரையுலகில் நான் ஈ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஹம்சா நந்தினி.கன்னடம், இந்தி மொழிப்படங்களிலும் நடித்துள்ள இவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.
அதற்காக கீமோ சிகிச்சை மேற்கொண்ட ஹம்சா, தற்போது அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.


இப்போது தான் மிகவும் நலமாக இருப்பதாக குறிப்பிட்டு வீடியோ ஒன்றை அவர் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் ஒரு வருடத்திற்கு முன்பு சிகிச்சையின்போது மொட்டை தலையுடன் இருந்து தற்போது முடியுடன் இருப்பதை காட்டியிருக்கிறார்.