
இந்திய பிரதமராக வரும் திங்கள்கிழமை பதவியேற்க உள்ள நரேந்திர மோடி, தனது சொந்த மாநிலமான குஜராத்தை விட்டு விடைபெற்றார்.
டெல்லி புறப்படும் முன்பு தனது தாயாரை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது மோடிக்கு இனிப்பு ஊட்டிய அவரது தாயார், மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.
டெல்லியில் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு, தாயார் என்ற முறையில் வழிசெலவுக்கு சிறிதளவு பணத்தையும் வழங்கினார்.
அதனை மறுக்காமல் வாங்கிக்கொண்ட நரேந்திர மோடி, பின்னர் தனது தாயார் மற்றும் உறவினர்களோடு சேர்ந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார்.
இதையடுத்து டெல்லி புறப்பட்ட நரேந்திர மோடி, குஜராத் மக்களிடம் பிரியாவிடை பெறும் விதமாக குட்பை குஜராத் என்று கூறினார்.




