17 வருட கடின உழைப்பு.. தொழிலாளியின் திருமணத்துக்கு அதிர்ச்சி கொடுத்த சிங்கப்பூர் முதலாளி!!

517

புதுக்கோட்டையில்..

புதுக்கோட்டையை சேர்ந்த தனது ஊழியரின் திருமணத்தில் கலந்துகொள்ள வந்திருக்கிறார் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவர். இதனால் மொத்த கிராமமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறது.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கட்டளை பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த 17 வருடங்களாக சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.

இந்நிலையில் அவருக்கு திருமணம் நடத்த அவரது பெற்றோர் முடிவெடுத்து இருக்கின்றனர். அதன்படி அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கும் மாரிமுத்துவிற்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

இந்த திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு தான் பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஹெல்வின் யாவ் என்பவருக்கு அழைப்பு விடுத்திருந்தார் மாப்பிள்ளை மாரிமுத்து.

அதற்கு தான் நிச்சயம் வருவதாக அவர் தெரிவித்து இருந்திருக்கின்றார். இந்நிலையில் நேற்று புதுக்கோட்டையில் மாரிமுத்துவிற்கு திருமணம் நடைபெற்று இருக்கிறது. இந்த திருமணத்திற்கு ஹெல்வின் யாவ் தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் வந்திறங்கியுள்ளார்.

தனது திருமணத்திற்கு வருகை தரும் தனது முதலாளியை கௌரவிக்க நினைத்த மாரிமுத்து ஊர் எல்லையில் இருந்து கெண்டை மேளம் முழங்க சாரட் குதிரை வண்டியில் உறவினர்கள் சூழ அவரை அழைத்து வந்தார்.

திருமணத்தில் கலந்து கொண்ட அவர் பின்பு பந்தியில் அமர்ந்து உணவு அருந்தி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து திருக்கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களோடு சேர்ந்து மரக்கன்றுகளையும் அவர் நட்டிக்கிறார்.

அந்த பள்ளியில் நன்றாக படிக்கக்கூடிய மாணவ மாணவியர்களுக்கு காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை அவர் பரிசாக வழங்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் அந்தப் பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூபாய் 50 லட்சத்தை நன்கொடையாகவும் வழங்கியுள்ளார் தாராள மனம் படைத்த ஹெல்வின்.

இறுதியாக தனது பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பிய அவர் தான் நட்டு வைத்த மரக்கன்றுகள் மற்றும் மாணவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார்.

தனது திருமணத்திற்காக சிங்கப்பூரிலிருந்து வந்திருந்த தனது முதலாளி தான் படித்த பள்ளிக்கும் நிதி உதவி செய்தது மாரிமுத்துவை பெரும் மகிழ்ச்சிகொள்ள செய்தது. மேலும் இந்த சம்பவம் பகுதி மக்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.