இரவு நேர பணியில் திடீரென மயங்கி விழுந்த மருத்துவ மாணவி.. விசாரணையில் தெரியவந்த உண்மை!!

348

தெலுங்கானாவில்..

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி சீனியர்களின் Ragging தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

26 வயதான டி ப்ரீத்தி, காகடியா மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு முதுகலை பட்டதாரியாகப் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென அந்த மாணவி தற்கொலை செய்துள்ளார்.

கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ப்ரீத்தியின் தந்தை ஹைதராபாத் காவல் நிலையத்தில் முகமது செரீப் என்பவரின் மீது புகார் அளித்துள்ளார்.

புகாரில் இரண்டாம் ஆண்டு முதுகலை பட்டதாரியான செரீப் மற்றும் அவரது நண்பர்கள் மாணவியை Ragging செய்திருக்கிறார்கள் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ப்ரீத்தி தற்கொலை முயற்சி எடுத்துள்ளார்.

காவல் துறை ப்ரீத்தியின் தொலைப்பேசியில் அவர் சக மாணவியுடன் தனக்கு நடக்கும் Ragging கொடுமைகளைப் பற்றிய சாட்கள் ஆதாரமாகக் கிடைத்துள்ளன.  மாணவி ப்ரீத்தியின் இறப்பிற்கு மருத்துவ கல்லூரி மாணவர்கள் அனைவரும் காகடியா மருத்துவ கல்லூரியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இறந்த மாணவியின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக 10 லட்சம் ரூபாய் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தைப் பற்றி தேசிய மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது.