வவுனியா மீனவ சங்க உறுப்பினர்கள் இருவர் மீது வாள் வெட்டு!!

349

Knif

சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டதோடு மட்டுமல்லாமல், அதனை தடுக்கச் சென்ற மீனவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேக நபர்கள் தப்பியோடிய சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது..

வவுனியா நகர குளங்களில், மீனவ சங்கங்களில் பதிவு செய்தோர், குறித்த குளங்களில் மீன்பிடியில் ஈடுபடலாம். இவ்வாறு தம்மை பதிவு செய்துள்ள சிலர் குளத்தில் போடப்பட்ட மீன்களை இரவு நேரங்களில் திருடிச் சென்றுள்ளனர்.

அத்தோடு களவுத்தனமாக மீன்பிடியிலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இவர்களை மடக்கிப் பிடிக்க வேண்டும் என்பதற்காக மீனவ சங்க உறுப்பினர்கள் 15 ஆம் திகதி இரவு காத்திருந்துள்ளனர். இதன்போது மீன்களைத் திருடிய சந்தேக நபர்கள் தப்பிவிடவும் அவர்களை பின் தொடர்ந்து மீனவ சங்க உறுப்பினர்களும் துரத்திச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் குறித்த சர்வதேச சங்கங்கள் தம்மிடம் இருந்த வாளினால் மீனவ சங்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இச்சம்பவத்தில் பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த ராஜமுஹைதீன் (45), சதீஸ் காந்தன், (46) ஆகிய இருவரும் வாள் வெட்டுக்கு இலக்காகி வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாங்கள் மிகவும் சிரமத்தின் மத்தியில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது தமக்கு கவலை தருவதாக பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.