70 வயது காதலிக்கு தாலி கட்டிய 75 வயது காதலன்.. இளமை-முதுமை வேறுபாடுகளை கடந்த காதல்!!

474

மகாராஷ்டிராவில்..

”காதல்” என்ற ஆழமான அன்பின் பிணைப்பில் வயது வித்தியாசம் எது? யாருக்கும் எந்த வயதிலும் காதல் வரலாம், இளமை- முதுமை என்ற வேறுபாடுகள் கிடையாது. தன்னுடைய தனிமையை போக்க, தன்னுடைய கஷ்டங்களை பகிர்ந்துகொள்ள ஒரு துணை கிடைத்துவிட்டாலே போதும், அப்படியொரு அழகான உறவுக்கு ஈடுஇணை ஏதும் உண்டா?

இதை நிரூபிக்கும்விதமாக சமீபத்தில் வீடியோவொன்று வைரலாகி வருகிறது. அதில் 75 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் 70 வயதான காதலிக்கு தாலிகட்டுகிறார். இருவரும் முதியோர் காப்பகத்தில் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ள காதல் மலர்ந்துள்ளது.

ந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள முதியோர் காப்பகத்தில் பாபுராவ் பாட்டீல் மற்றும் அனுசுயா ஷிண்டே இருவரும் சந்தித்துக் கொண்டனர். நாளடைவில் ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்த காதலாக மலர்ந்தது, இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

இதற்கு அனைவரும் சம்மதம் தெரிவிக்க கோலாகலமாக திருமணமும் நடந்து முடிந்துள்ளது. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, பலரும் தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.