23 வயதில் மகளை வைத்துக்கொண்டு 47 வயதில் குழந்தை பெற்றெடுத்த நடிகை!!

515


கேரளாவில்..கேரளாவில் நடிகை ஒருவரின் 47 வயது தாய் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். மலையாள சின்னத்திரை நடிகை ஆர்யா பார்வதி(23). ‘செம்பட்டு’, ‘இளையவாள் காயத்ரி’ ஆகிய தொடர்கள் இவரை பிரபலமாக்கியது.சமீபத்தில் இவரது 47 வயது தாய் கர்ப்பமாக இருப்பதாக ஆர்யா பார்வதி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இது பலரையும் அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் ஆழ்த்தியது. இதன்மூலம் நேர்மறை, எதிர்மறை விமர்சனங்களை அவர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்கொண்டனர்.
இந்த நிலையில் ஆர்யா பார்வதியின் தாய் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பார்வதி பகிர்ந்துள்ளார். அத்துடன் என்னை அம்மாவை பத்திரமாக திரும்ப கொண்டு வந்தவர்களுக்கு நன்றி என மருத்துவர்களை குறிப்பிட்டுள்ளார்.


தமிழில் வெளியான ”வீட்ல விஷேசம்” படத்தில் கதாநாயகனின் தாய் கர்ப்பமாகி, இறுதியில் குழந்தையை பெற்றெடுப்பார். அதனைப் போலவே தற்போது ஆர்யா பார்வதி வீட்டில் தற்போது நடந்துள்ளது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.